www.garudabazaar.com

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் 'கலகத்தலைவன்'.. வில்லனாக Biggboss டைட்டில் வின்னர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி நடிப்பில் உருவாகி உள்ள 'கலகத்தலைவன்' திரைப்படத்தில் வில்லனாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடித்துள்ளார்.

biggboss aarav negative role in udhayanidhi kalaga thalaivan

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகும் கலகத்தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார். உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீஸர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியாகி உள்ளது. ஸ்கின் டிரேடை மையாக வைத்து டிரெய்லர் காட்சிகள் த்ரில்லர் வகைமையில் அமைந்துள்ளன. ஆக்சன் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. 1:50 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று லட்சக்கணக்கில் பார்வையாளர்களையும் கடந்துள்ளது.

biggboss aarav negative role in udhayanidhi kalaga thalaivan

இந்த நிலையில், தமிழ் பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவ், கலகத்தலைவன் திரைப்படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. முதல் சீசனில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமான ஆரவ், அடுத்து ஒரு சில திரைப்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். அப்படி ஒரு சூழலில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத்தலைவன் படத்தில் வில்லனாகவும் ஆரவ் நடித்து வருவதாக தெரிகிறது.

biggboss aarav negative role in udhayanidhi kalaga thalaivan

நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

biggboss aarav negative role in udhayanidhi kalaga thalaivan

People looking for online information on Aarav, Magizh Thirumeni, Nidhi Agarwal, Udhayanidhi Stalin will find this news story useful.