www.garudabazaar.com

பலூன் ஊஞ்சலில் நிறைமாத கர்ப்பத்துடன் 'பாண்டவர் இல்லம்' நடிகை.. வைரலாகும் போட்டோ ஷூட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாண்டவர் இல்லம்.

Pandavar Illam Serial Actress Anu maternity photoshoot

Also Read | தனது மகனுக்கு பெயர் சூட்டி குடும்ப PHOTO-வை வெளியிட்ட நரேன்.. குழந்தை பெயர் என்னனு பாருங்க 😍

பிரபல நடிகை பாப்ரி கோஷ் முன்னணி நடிகையாக நடிக்கும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த தொடர் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டவர் குடும்பம் & ஜமீன் குடும்பம் என்ற இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகைமையை கருவாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

'பாண்டவர் இல்லம்’  சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. நடிகை அனு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம்  சின்னத்திரையில் பிரபலமானவர். பின்னர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர்.

நடிகை அனு கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அனு 7 மாத கர்ப்பிணியாக  இருக்கிறார்.

சமீபத்தில் அனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு தனது கணவர் விக்னேஷ் குறித்தும்  பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில், "எங்களைச் சுற்றியுள்ள அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் எங்கள் 7வது மாத வளைகாப்பு நிறைவு! ❤️✨ நானும் என் கணவரும் இந்த முறை ஒரு எளிமையான அழகான வளைகாப்பு நிகழ்வை விரும்பினோம். எங்களின் இந்த நாள் மிகவும் தனிப்பட்டதாகவும், எங்கள் குழந்தையுடன் எங்கள் தொடர்பு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். 😇 

இந்த நிகழ்வு என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது, ஏனென்றால் கணவர் விக்கி எனக்கு நலங்கு சடங்குகளை செய்வது இதுவே முதல் முறை. ஊரில் உள்ள புது மணப்பெண்ணைப் போல் என் முகம் சிவந்தது! 😜😍 

விழாவின் போது நாங்கள் கிளிக் செய்த சில படங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினோம். எங்கள் சிறிய குடும்பத்திற்கு உங்களின் அனைத்து நல்வாழ்த்துகளும் தேவை! 🤗".என அனு பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது கணவர் விக்னேஷ் உடன் இணைந்து பலூன் ஊஞ்சலில் அந்தரத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கிரேன் உதவியுடன் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை டிகே போட்டோகிராபி அணியினர் எடுத்துள்ளனர்.

Also Read | கோலிவுட் Couple பிரசன்னா & சினேகா.. எங்க இருக்காங்க பாருங்க.. வைரல் ஃபோட்டோஸ்!

Pandavar Illam Serial Actress Anu maternity photoshoot

People looking for online information on Pandavar Illam, Pandavar Illam Serial Actress, Serial Actress Anu, Serial Actress Anu maternity photoshoot will find this news story useful.