"247 KM SPEED-ஆ..?.. என் பசங்கள தப்பா வழிநடத்துறனா? கஷ்டமா இருக்கு" - TTF வாசன் வீடியோ..!
முகப்பு > சினிமா செய்திகள்கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல பைக்கர் மற்றும் youtuber டிடிஎஃப் வாசன் அண்மையில் தம் ரசிகர்களை சந்தித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின.
Also Read | சிவாங்கியின் ‘ரஜினி கெட்டப்’ ரஜினி வரைக்கும் போயிடுச்சா.?.. CWC 3-ல் வித்யூலேகா சர்ப்ரைஸ்.!
2k கிட்ஸ்கள் பலருக்கும் பரிச்சயமான டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இணைய வெளியில் உள்ளனர். ஆனால் பெரிதாக மற்ற வயதினருக்கு அவர் அறிமுகமாகாமல் இருந்திருந்தார். எனினும் அண்மைக்காலமாக டிடிஎஃப் வாசன் ட்ரெண்ட் ஆனதும் பலரும் அவரை அறிந்து கொண்டனர்.
முன்னதாக TTF வாசன் அந்த கூட்டத்தில் தன்னுடைய விலையுயர்ந்த ஹெல்மெட்டை மிஸ் பண்ணிவிட்டதாகவும், ஆனாலும் அதற்கு காரணம், தன் கவனக்குறைவு தானே தவிர, யாரும் திருடியிருக்க மாட்டார்கள், ஒரு வேளை நியாபகார்த்தமாக யாரேனும் எடுத்து வைத்திருக்கலாம் என்று கூறி அவரது ரசிகர்களை தன் பெருந்தன்மையால் நெகிழ வைத்தார். இந்நிலையில் TTF Vasan அதிவேகத்தில் பைக் ஓட்டுவதாகவும், அவருடைய ரசிகர்களை தவறான திசையில் அவர் வழி நடத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது பலரும் முன் வைத்தபடி இருந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்து டிடிஎஃப் வாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர், “இந்தியா முழுவதும் பல MOTO Vlog சேனல்கள் இருந்தாலும் நம்முடைய சேனல் தனித்துவமானது. ஆனால் சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் தகவல்களை கேட்டால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.. நான் பைக்கில் 246, 247 கிலோமீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டில் பைக் ஓட்டி செல்வதாக குறிப்பிடுகிறார்கள்.
நான் அந்த வேகத்தில் ஓட்டியது உண்மைதான். ஆனால் அது எதுவும் தமிழ்நாட்டில் ஒட்டவில்லை. எக்ஸ்பிரஸ் ஹைவேயில், முறையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் நான் முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். ஒரு பைக்கர் தன்னுடைய பைக்கின் அதிகபட்ச வேகம் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். எனவே அதை வேறு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்கிற வேண்டுகோளுடன் நான் முயற்சித்து இருக்கிறேன்.
இதே போல் நான் என் பசங்களுக்கு தவறாக வழிகாட்டுகிறேன் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இதையெல்லாம் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. நான் எப்போதும் அவர்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறேன். ஹெல்மெட் போடுவதை கட்டாயம் வலியுறுத்திதான் வீடியோக்களில் பேசியிருக்கிறேன். இதுபோன்ற முயற்சிகளை வேறு யாரும் பண்ண வேண்டாம், நான் முறையான பயிற்சி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் செய்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் பொறுப்புதுறப்பினை அறிவித்துதான் அனைத்தையும் செய்கிறேன். ஆனால் திடீரென இப்படி புதுவிதமான கருத்துக்கள் பரவுவது அதிர்ச்சியாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது.
ஏன் வெறுப்பை உமிழ்கிறார்கள் என தெரியவில்லை, பரவாயில்லை, எது நடந்தாலும் நடப்பது தான் நடக்கும்.. ஆனால் எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read | அதிர்ச்சி.. 4 தேசிய விருது வென்ற இயக்குநர் மரணம்.! புகழ்பெற்ற அவரது 8 படங்கள்.!
"247 KM SPEED-ஆ..?.. என் பசங்கள தப்பா வழிநடத்துறனா? கஷ்டமா இருக்கு" - TTF வாசன் வீடியோ..! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- 250 Km SPEED! ஏன் FAKE News Spread பண்றீங்க? இதுதான் நடந்த உண்மை - TTF Clarification
- "ரொம்ப கஷ்டமா இருக்கு.." நாங்க தப்பான INSPIRATION-ஆ..! கொந்தளித்த TTF Brothers Clarification Video
- "என் தப்புதான், யாரையும் குறை சொல்ல விரும்பல.." வருத்தப்பட்ட TTF VASAN | விபரீதமான TTF Fans Meet 🥺
- "நான் 247 Km ஸ்பீடுல போனது உண்மை தான்..ஆனா.." - TTF Vasan கொடுத்த புது விளக்கம்
- 🔴TTF VASAN LIVE | TTF VASAN Single-ஆ? Committed-ஆ ? Twin Throttlers | TTF FANS
- 'Selfie கேட்ட மக்கள்'.. அன்பை அள்ளிக்கொட்டிய TTF.! கேக் வெட்டி கொண்டாட்டம் | TTF Vasan
- 'காணாமல் போன TTF ஹெல்மெட்'.. விலை மட்டும் இவ்ளோவா? மிரண்டு போன ரசிகர்கள் | TTF Vasan
- "எல்லாம் என் தப்புதான் 😔".. யாரையும் குறை சொல்ல மாட்டேன்! TTF வெளியிட்ட உருக்கமான வீடியோ | TTF Vasan
- விபரீதமான TTF Fans Meet 🥺 "என் தப்புதான், யாரையும் குறை சொல்ல விரும்பல.." வருத்தப்பட்ட TTF VASAN
- "டேய் நிறுத்த சொல்லுடா அவன..." கோபப்பட்ட TTF VASAN
- யாருயா இந்த TTF பசங்க, கொல Mass பண்றாங்க 🔥🔥 இவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா