ஒரே ஒரு Bday.. ஓவர் நைட்டில் பாப்புலர்.. fans meet-ல் ஹெல்மெட்டை இழந்த TTF வாசன் .. உருக்கமான வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக டிடிஎஃப் வாசன் பிரபலமாகியுள்ளார். 90ஸ் கிட்ஸ்களுக்கு டிடிஎஃப் வாசன் யார் என்று தெரிய வாய்ப்பு குறைவுதான் என்றாலும் 2கே கிட்ஸ்களுக்கு அவர் தான் ஹீரோ.

கோவையில் ஒரு கிராமத்தில் பிறந்த டிடிஎஃப் வாசனை சுமார் 27 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் youtube மூலம் பின் தொடருகின்றனர். ஆம், பைக் மீது அலாதி பிரியம் உள்ள இளைஞர்களுக்கு டிடிஎஃப் வாசன் நன்கு பரீச்சயமானவர். இந்நிலையில் தான், தன் பிறந்த நாள் மீட் அப் குறித்து TTF வாசன் தமது யூடியூபில் பகிர்ந்த வீடியோ வைரலானது.
ஆம், தான் நடத்திய இந்த ஒரே ஒரு பிறந்தநாள் மீட் அப் மூலம், ஓவர் நைட்டில் வைரலாகி உள்ளார் TTF வாசன். இவருக்கு எங்கிருந்து இப்படி ஒரு ரசிகர்கள் படை வந்தது என 2கே கிட்ஸை தவிர்த்த இணையவாசிகள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். லட்சம் மதிப்புள்ள தமது பைக்கில் சாகசங்கள், ரேஸிங் என இந்த 23 வயது TTF வாசன் கோவை, மேட்டுப்பாளையத்தில் தன் ரசிகர்களை சந்திக்க அழைப்பு விடுத்தார்.
இவரை காண ரசிகர்கள் குவிந்ததும், அவரை சாலையிலேயே வழிமறித்து அன்பை காட்டியதும் வைரலாகியுள்ளது. இந்நிலையில் தான் , தன் பிறந்த நாள் மீட் அப் குறித்து பேசியுள்ள TTF வாசன், தனது விலை உயர்ந்த ஹெல்மெட் மிஸ் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் ,“இந்த பர்த்டே மீட்டில் என் ஹெல்மெட் காணாமல் போய்விட்டது. இதேபோல் எனக்கு வந்த சில கிஃப்ட் பொருட்களையும் காணோம். ஆனால் யாரும் திருடியிருக்கிறார்கள் என நான் கூற மாட்டேன். என் நியாபகார்த்தமாக யாராவது ஹெல்மெட்டை எடுத்துச் சென்றிருக்கலாம். என்ன சொன்னாலும் இந்த கூட்டத்தில் இத்தனைக்கும் நடுவே, என் உடைமைகளை நான்தான் பத்திரமாக வைத்திருக்க வேண்டு. என் பொறுப்புதான் அது. ஆகவே அவர்களை குறை சொல்ல மாட்டேன்..” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள், ஹெல்மெட் காணாமல் போன பின்னு கூட, டிடிஎஃப் வாசன் அண்ணா இப்படி மனிதநேயத்துடன் நடந்துகொள்கிறாரே? யாரையும் குறை சொல்வதை தவிர்த்து, இந்த இழப்புக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்கிறாரே.? என நெகிழ்ந்து போயுள்ளனர்.
ஒரே ஒரு BDAY.. ஓவர் நைட்டில் பாப்புலர்.. FANS MEET-ல் ஹெல்மெட்டை இழந்த TTF வாசன் .. உருக்கமான வீடியோ வீடியோ