Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

ரன்பீரை பாக்க ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்.. அடுத்த நிமிஷமே கூட்டத்தில் நடந்த பரபரப்பு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். ஹிந்தியில் ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்துள்ள ரன்பீருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

fans take selfie with ranbir kapoor and fell down actor helps

மேலும், சமீபத்தில் இவரது நடிப்பில், 'பிரம்மாஸ்திரா' என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், ரன்பீருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவியும் நடிகையுமான ஆலியா பட் நடித்திருந்தார். மேலும், இவர்களுடன் நாகார்ஜூனா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இது தவிர, சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிகர் ஷாருக்கானும் நடித்திருந்தார். இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருந்தார்.

fans take selfie with ranbir kapoor and fell down actor helps

பிரம்மாஸ்திரா வெளியான அனைத்து மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ரன்பீரை காண வந்த ரசிகர்களுக்கு நடந்த சம்பவமும், அதன் பின்னர் ரன்பீர் கபூர் செய்த செயலும், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பிரம்மாஸ்திரா படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் ஆகியோர், தங்கள் படத்திற்கு கிடைத்த ஆதரவுக்காக சமூக வலைத்தளங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தங்களின் நன்றிகளை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேசிய சினிமா தினமான இன்று, தானே பகுதியில் உள்ள திரை அரங்கு ஒன்றில் ரசிகர்களை சந்திப்பதற்காக ரன்பீர் கபூர் சென்றுள்ளார்.

fans take selfie with ranbir kapoor and fell down actor helps

ரன்பீரை கண்டதும், ரசிகர்கள் கூட்டம் கடும் உற்சாகத்தில் திளைத்த நிலையில், பலரும் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துள்ளனர். சிலர் அவருடன் பேசிக் கொண்டும் இருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது. ரன்பீர் கிளம்ப தயரான போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர், பேரிகேட் மீது ஏறி, ஃபோட்டோ எடுக்க முயன்றனர். அப்போது அங்கு நின்றவர்களில் சிலர் திடீரென கீழே விழுந்துள்ளனர்.

fans take selfie with ranbir kapoor and fell down actor helps

இதனைக் கண்டதும் உடனடியாக அவர்களுக்கு உதவ முற்பட்டார் ரன்பீர் கபூர். சிலர் எழுந்திருக்க உதவி செய்த ரன்பீர், அவர்கள் நலத்தையும் கேட்டறிந்து கொண்டார். இதன் பின்னர்  அங்கிருந்து கிளம்பி சென்றார் ரன்பீர் கபூர். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

fans take selfie with ranbir kapoor and fell down actor helps

தொடர்புடைய இணைப்புகள்

fans take selfie with ranbir kapoor and fell down actor helps

People looking for online information on Ayan Mukerji, Brahmastra Part One – Shiva, Fans, Ranbir Kapoor will find this news story useful.