Sandunes Others
RRR Others USA
www.garudabazaar.com

BGM-ல ‘டூடுடூ’.. ஆனா Post ‘டம்.. டம்’ மாதிரி தெரியுதே? .. நயன்தாரா - விக்கி திருமண பேச்சில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர்.

trending post creates nayanthara vignesh shivan marriage talks

அண்மையில் அஜித் நடித்த வலிமை படத்துக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்களும் ட்ரெண்ட் ஆகின. இயக்குநர் விக்னேஷ் சிவன்,விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

trending post creates nayanthara vignesh shivan marriage talks

இந்த திரைப்படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற முக்கியமான பாடலாக பாடல் டூடுடூ.. டூடுடூ.. டுட்டூ டுட்டூ.. என்கிற அனிருத் இசையமைத்த இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியானதில் இருந்தே  ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் இந்த பாடலைக் கொண்டு விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கும் பதிவு ஒன்று வைரலாகி இருக்கிறது.

trending post creates nayanthara vignesh shivan marriage talks

இந்த பதிவு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரின் திருமணம் குறித்து ட்ரெண்டிங்கான பேச்சுகளை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே முன்பொருமுறை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தை குறித்து விக்னேஷ் சிவனிடம் இணையதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, திருமணத்திற்கான நேரத்தை எதிர்நோக்கியும் பணத்தை சேர்த்தும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.‌

trending post creates nayanthara vignesh shivan marriage talks

இதனிடையே நயன்தாரா, விக்னேஷ்சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இருக்கும் படம் ‘ராக்கி’ இந்த படத்தில் நயன்தாரா, வசந்த் ரவி, இயக்குனர் பாரதி ராஜா நடித்துள்ளனர். தர்புகா சிவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

trending post creates nayanthara vignesh shivan marriage talks

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டிருக்கும் இந்த பதிவில் 2022-ஆம் வருடத்தின் 2-வது மாதமான பிப்ரவரியின் 2-ஆம் தேதி ஒரு முக்கியமான தேதி என்று குறிப்பிட்டு, இந்த தேதியில் யார் திருமணம் செய்து கொள்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இந்த தேதியை மிஸ் பண்ணுவதற்கு விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை பார்த்த பலரும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் குறித்த சூசகமான பதிவாக இது இருக்குமோ? என்று பேசி வருகின்றனர். இந்த பதிவின் பின்னணியில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டூடுடூ.. டூடுடூ.. டுட்டூ டுட்டூ’.. பாடல் ஒலிக்கிறது என்றாலும், உண்மையில் இந்த செய்தி திருமணம் பற்றியதாக இருந்தால், அண்மையில் வெளியான விஷாலின் எனிமி படத்தில் இடம் பெற்ற ‘டம்.. டம்’ பாடல் இந்த சூழலுக்கு பொருந்தும் என்றும் ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

BGM-ல ‘டூடுடூ’.. ஆனா POST ‘டம்.. டம்’ மாதிரி தெரியுதே? .. நயன்தாரா - விக்கி திருமண பேச்சில் ரசிகர்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

trending post creates nayanthara vignesh shivan marriage talks

People looking for online information on Kathu vakkula rendu kathal, Nayanthara, Nayanthara Vignesh Shivan marriage, Tum tum, Tututu tututu, Valimai, Vignesh shivan will find this news story useful.