Sandunes Others
RRR Others USA
www.garudabazaar.com

BREAKING: 'வலிமை' படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த ரேட்டிங்! பட நீளம் எவ்வளவு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 'வலிமை' படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Breaking: Valimai Censored U/A.. runtime 2hrs 58 mins

வலிமை டிரெய்லர்

வலிமை படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர். வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.

வலிமை டிரெய்லர்ல இதை எல்லாம் கவனிச்சீங்களா? நிரவ் ஷா சம்பவம்!

Breaking: Valimai Censored U/A.. runtime 2hrs 58 mins

வலிமை MANIA

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவ்ட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Breaking: Valimai Censored U/A.. runtime 2hrs 58 mins

'வலிமை' CBFC

இந்நிலையில் 'வலிமை' படம் சென்சாரகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Breaking: Valimai Censored U/A.. runtime 2hrs 58 mins

Breaking: Valimai Censored U/A.. runtime 2hrs 58 mins

தொடர்புடைய இணைப்புகள்

Breaking: Valimai Censored U/A.. runtime 2hrs 58 mins

People looking for online information on Ajith Kumar, அஜித், அஜித்குமார், திருவள்ளூர் போலிஸ், திலிப் சுப்பராயன், பைக், பைக் சண்டை, யுவன் சங்கர் ராஜா, வலிமை, வலிமை இண்டர்வெல், Bike Stunt, Boney kapoor, Censored, H Vinoth, Madurai, Madurai Police, Nirav shah, Valimai, Valimai CBFC, Valimai trailer, Valimai UA, Whistle Theme, Yuvan Shankar Raja will find this news story useful.