RRR Others USA
www.garudabazaar.com

VIDEO: வந்தான்டா மதுரைக்காரன்! கொல மாஸாக வெளியான 'வலிமை' படத்தின் GOOSEBUMPS டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் டிரெய்லர் கோலாகலமாக வெளியாகி உள்ளது.

Actor Ajithkumar Valimai Trailer Released and went Viral

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

விக்ரம் வேதா இந்தி ரீமேக்! வெளியான மாஸ் BTS Image! செம ஷூட்டிங் அப்டேட்!

வலிமை டீம்

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Actor Ajithkumar Valimai Trailer Released and went Viral

வலிமை டிரெய்லர்

வலிமை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பாக டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி டிரெய்லர் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் டிரெய்லர் முன்னோட்டம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான ரசிகர்களும் வியந்து பாராட்டும்படி அமைந்துள்ளது. அதிலும் முன்னோட்டத்தில் உள்ள சண்டைக்காட்சிகள் தமிழ் சினிமா இதுவரை தொடாத களமாக இருப்பதாக தெரிகிறது.

Actor Ajithkumar Valimai Trailer Released and went Viral

முன்னோட்டத்தின் கவனிக்க வேண்டிய குறிப்புகளும் நிறைய உள்ளன. மதுரை மாவட்டம் பற்றிய குறிப்புகளும் படத்தின் டிரெய்லரில் அமைந்துள்ளன. அழகர்சாமியின் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. நடிகர் அஜித்தின் பைக் ஸ்டண்டும், யுவனின் பின்னணி இசையும், நிரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தியுள்ளன. 

இன்று வலிமை படத்தின் டிரெய்லர் வெளியீடு எத்தனை மணிக்கு? வெளியான OFFICIAL அறிவிப்பு!

வலிமை பொங்கல்

Actor Ajithkumar Valimai Trailer Released and went Viral

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது.  'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் விசில் தீம் இசையும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

VIDEO: வந்தான்டா மதுரைக்காரன்! கொல மாஸாக வெளியான 'வலிமை' படத்தின் GOOSEBUMPS டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajithkumar Valimai Trailer Released and went Viral

People looking for online information on Ajith Kumar, AK, அஜித்குமார், வலிமை, வலிமை டிரெய்லர், Boney kapoor, H Vinoth, Valimai, Valimai trailer will find this news story useful.