RRR Others USA
www.garudabazaar.com

வலிமை படத்தின் Trailer- ல இது இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்! ரசிகர்கள் ஏக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி டிரெய்லர் வீடியோவிலும் அறிவிக்கப்படவில்லை.

Ajith Kumar Valimai Movie Release Date Not Confirmed

வலிமை பொங்கல்

Ajith Kumar Valimai Movie Release Date Not Confirmed

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.  மதுரை மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் வலிமை ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை ரிலீஸ் தேதி

Ajith Kumar Valimai Movie Release Date Not Confirmed

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.  வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கபடாமலே இருந்தது. இந்நிலையில் நடிகை ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியாக ஜனவரி 13 என்பதை ரசிகர் ஒருவரின் பதிவை பகிர்ந்து அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று வெளியான வலிமை டிரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகவில்லை. வரும் நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை வினியோகஸ்தர்கள்

வலிமை படத்தின் கோயமுத்தூர் உரிமையை கற்பகம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், மாநாடு படத்தின் தமிழக வினியோகஸ்தருமான  SSI  Productions சுப்பையா சண்முகம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். மேலும் வலிமை படத்தின் செங்கல்ப்பட்டு ஏரியா உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆக இருப்பதாக கோபுரம் பிலிம்சால் அறிவிக்கப்பட்டது.

வலிமை உரிமை

Ajith Kumar Valimai Movie Release Date Not Confirmed

இந்த செங்கல்ப்பட்டு ஏரியா தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஏரியாவாகும். வலிமை படத்தின் செங்கல்பட்டு உரிமையை இடிமுழக்கம், வேலன் படங்களின் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தனது ஸ்கைமேன் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார்.

திருநெல்வேலி

வலிமை படத்தின் திருநெல்வேலி - கன்னியாகுமரி- தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய TK ஏரியா  உரிமையை MKRP  Productions ராம் பிரசாத் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். வலிமை படத்தின் வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம் சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார்.

அன்புசெழியன்

Ajith Kumar Valimai Movie Release Date Not Confirmed

வலிமை படத்தின் சேலம் ஏரியா உரிமையை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. அதே போல் திருச்சி ஏரியாவை ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது. அதே போல் சென்னை சிட்டி ஏரியாவை வலிமை படத்தின் இணை தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே சுயமாக வெளியிடுகிறது.

வலிமை படத்தின் TRAILER- ல இது இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்! ரசிகர்கள் ஏக்கம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie Release Date Not Confirmed

People looking for online information on Ajith Kumar, அஜித் குமார், வலிமை ட்ரெய்லர், H Vinoth, Pan India Valimai, Valimai, Valimai Release, Valimai release date, Valimai Tamil, Valimai trailer will find this news story useful.