www.garudabazaar.com

"இந்த மாதிரிலாம் தாலி கட்டுனா 3 வருஷம் ஜெயில்!".. சீரியல் ப்ரோமோவுக்கு ஐபிஎஸ் Viral ரியாக்‌ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி-இன் புதிய சீரியல் 'தென்றல் வந்து என்னை தொடும்'. பிரபல விஜய் டிவி சீரியலான 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' தொடர் மூலம் பிரபலமான வினோத் பாபு, 'ஈரமான ரோஜாவே' சீரியல் மூலம் பிரபலமான பவித்ரா ஜனனி ஆகியோர் தான் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

TN IPS viral tweet over Thendral Vanthu Ennai Thodum Promo

இந்த சீரியலின் ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ப்ரோமோவை பார்த்து சோஷியல் மீடியாவில் பலரும் கலவையான பார்வைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த ப்ரோமோவில், அமெரிக்காவில் படித்துவிட்டு பிறந்த ஊருக்கு வரும் பவித்ரா, கோவிலுக்கு வருகிறார். அமெரிக்காவில் இருந்து வந்தாலும் தம் ஊர் பண்பாடு மாறாமல் தான் இன்னும் இருப்பதாக பாட்டியிடம் பவித்ரா சொல்கிறார், இதனால் அனைவரும் பவித்ராவை புகழ்கின்றனர்.

TN IPS viral tweet over Thendral Vanthu Ennai Thodum Promo

இதனிடையே பெற்றோர் சம்மதம் இன்றி, பெற்றோருக்கு தெரியாமல் அங்கொரு காதல் ஜோடி திருமணம் செய்ய, அங்கு எண்ட்ரி கொடுக்கும் சீரியலின் ஹீரோ வினோத் பாபு, கட்டாயமாக தாலியை கழட்ட சொல்லி அடாவடி செய்கிறார். அப்போது அங்கு வரும் பவித்ரா, 'இது காட்டு மிராண்டி தனம்.. அம்மன் சாட்சியா கல்யாணம் நடந்திருக்கு. இதை அவிழ்க்க உனக்கு என்ன உரிமை?' என கோபமாக பொங்கி எழுகிறார்.

TN IPS viral tweet over Thendral Vanthu Ennai Thodum Promo

உடனே வினோத் பாபு,  “மஞ்ச கயித்த கட்டுனா, கல்யாணமா?”என்று கேட்பதுடன், சாமி கழுத்தில் இருக்கும் தாலிக் கயிறை பறித்து பவித்ரா கழுத்தில் கட்டி,  நெற்றியில் குங்குமம் வைத்து, 'இப்ப நான் உனக்கு தாலி கட்டி, பொட்டு வச்சிட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா? போவியா..' என்று சொல்லிவிட்டு நகர்கிறார்.

ALSO READ: கோமாவில் பிரபல சீரியல் நடிகர்! மூளைக்கட்டி அறுவை சிகிச்சை.. குணமாக ரசிகர்கள்  பிரார்த்தனை!

TN IPS viral tweet over Thendral Vanthu Ennai Thodum Promo

இந்த ப்ரோமோவை பார்த்த சிலர், “ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவருக்கு தாலி கட்டினால் கூட, அந்த ஆணுக்கு அந்த பெண் மனைவியாக தான் வாழ வேண்டுமா? என்னப்பா இதெல்லாம்?.. இந்த மாதிரியான பிற்போக்கு சிந்தனைகள் இன்னும் சமூகத்தில் நிலவுகின்றன. 

TN IPS viral tweet over Thendral Vanthu Ennai Thodum Promo

பெண்கள் மீது take for granted வகையிலான வன்முறைகள் ஆண்களால் அதிகரிப்பதற்கு இப்படியான சிந்தனைகளே காரணம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், இந்த சீரியலின் ப்ரோமோவுக்கு ரியாக்ட் செய்துள்ளார். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது. ஆம், அவர் இந்த ப்ரோமோவை ரீ-ட்வீட் செய்து, தமிழகத்தில் பெண்களை இப்படி துன்புறுத்தல் செய்வதற்கு வழங்கப்படும் தண்டனைகளை விளக்கியுள்ளார்.

அதில், “TN prohibition of Harassment of Woman Act, பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்கள், பஸ் ஸ்டாப், ரோடுகள், ரயில்வே ஸ்டேஷன், திரையரங்கம், பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பெண்கள் மீது செலுத்தப்படும் Harassmentகளுக்கு, 3 ஆண்டுகள் வரை அதிகபட்ச சிறை தண்டனையும், அபராதமாக குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையும்  விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

"இந்த மாதிரிலாம் தாலி கட்டுனா 3 வருஷம் ஜெயில்!".. சீரியல் ப்ரோமோவுக்கு ஐபிஎஸ் VIRAL ரியாக்‌ஷன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

TN IPS viral tweet over Thendral Vanthu Ennai Thodum Promo

People looking for online information on ThendralVanthuEnnaiThodumSerial IpsVarunkumar, Trending, Vijay Television, Vijya TV will find this news story useful.