www.garudabazaar.com

'சூர்யாவின்' அயன்!.. அப்படியே "கண்முன் நிறுத்திய" fans! சூர்யா என்ன சொல்லிருக்காரு பாருங்க! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் அயன். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகின்றன. இந்தப் படத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, ஜெகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் முதல் பாடல் 'பளபளக்குற பகலா நீ' என்கிற பாடல்.

Suriya fans recreated ayan scenes with same texture trending

இந்த பாடலை திருவனந்தபுரத்தில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி, தற்போது மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர். இதுதொடர்பாக வைரலாகும் வீடியோ ஒன்றில் ‘அயன்’ படத்தில் வரும் இந்த பளபளக்குற பகலா நீ பாடலின் ஒவ்வொரு காட்சியையும் அதே கேமரா கோணத்தில் கச்சிதமாக படமாக்கியிருக்கின்றனர் அந்த இளைஞர்கள்.

பெரிய அளவில் தொழில்நுட்ப உதவிகள் இன்றி மிகவும் எளிமையாக, அதே சமயம் அப்படியே அயன் பட பாடலை கண்முன்னே கொண்டு வந்த இந்த இளைஞர்களின் சாதுரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இதுகுறித்து இந்த வீடியோவை பார்த்துவிட்டு சூர்யாவும் தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் குறிப்பிடும்போது, “ட்ராலி.. ஜிம்மி.. முதலிய உதவி தொழில்நுட்பங்கள் இன்றி அயன் படத்தின் அந்த பாடலை அற்புதமாக ரீ கிரியேட் செய்து இருக்கிறீர்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. அயன் படக்குழுவினர் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து மகிழ்வார்கள்.

குறிப்பாக கே.வி.ஆனந்த் சார் இந்த வீடியோவை பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஒரு passion-ம் பேரன்பும் இருந்தால் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அதை செய்ய முடியும் என காட்டியிருக்கிறீர்கள். திருவனந்தபுர ரசிகர்களுக்கு நன்றி!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் சூர்யா, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இதேபோல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா40 திரைப்படத்துக்கு, ‘எதற்கும் துணிந்தவன்’ என்கிற தலைப்பை வைக்கப்பட்டிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அண்மையில் மிகவும் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக சூர்யா நடிக்கும் சூர்யா39 படத்தின் டைட்டில் லுக் வெளியானது. ‘ஜெய்பீம்’ என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.

டி.ஜே.ஞானவேல் இயக்கும் இந்த திரைப்படத்தில், ‘கர்ணன்’ பட நாயகி ரெஜிஷா விஜயன் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில்தான் சூர்யாவின் ரசிகர்கள் இப்படி ஒரு வீடியோவை தத்ரூபமாக உருவாக்கி தாறுமாறாக தெறிக்க விட்டுள்ளனர்.

'சூர்யாவின்' அயன்!.. அப்படியே "கண்முன் நிறுத்திய" FANS! சூர்யா என்ன சொல்லிருக்காரு பாருங்க! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya fans recreated ayan scenes with same texture trending

People looking for online information on JaiBhim, Suriya, Suriya39, Suriya40, Suriya41, Vaadivaasal will find this news story useful.