மருத்துவமனையில் சீரியல் நடிகர்! மூளைக்கட்டி அறுவை சிகிச்சை.. குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகரான வேணு அரவிந்த் பிரபலமானவர்.

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய தொலைக்காட்சி சீரியல்களான 'காதல் பகடை' (1997), 'காசளவு நேசம்' (1999) உள்ளிட்ட தொடர்களின் மூலம் புகழ் பெற்ற வேணு அரவிந்த், பின்னர் ராதிகா சரத்குமார் இயக்கிய 'செல்வி' (2005-2009), 'சந்திரகுமாரி' (2019) போன்ற சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் சீரியலான 'வாணி ராணி' (2013-2018) சீரியலில் பூமிநாதன் என்கிற இவரது கதாபாத்திரம் மிகவும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் தான் நடிகர் வேணு அரவிந்த், மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது?
மாதவனின் நடிப்பிலான 'அலைபாயுதே' (2000), சிலம்பராசனின் 'வல்லவன்' (2006) போன்ற திரைப்படங்களிலும் வேணு அரவிந்த் தனது நடிப்பை பதித்துள்ளார். இத்தகைய நடிகர், COVID-19-ஐயும் அதைத் தொடர்ந்து நிமோனியாவையும் எதிர்த்துப் போராடினார்.
பின்னர் இவருக்கு மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்கு, ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சூழலில், இப்போது வெளியாகியிருக்கும் தகவல் படி, வேணு அரவிந்த் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் இருக்கிறார்.
பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வேணு அரவிந்துக்காக பிரார்த்திப்பதுடன், அவர் விரைவில் நன்கு குணமாகி, ஆரோக்கியமாக எழுந்து வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சீரியல் நடிகர்! மூளைக்கட்டி அறுவை சிகிச்சை.. குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை! வீடியோ