தனுஷ் - மாரி செல்வராஜ் : இறங்கி அடிக்க போவது உறுதி - செம எனர்ஜியில் தனுஷ் பட ஷூட்டிங் ஸ்பாட்!
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அதிரடியான ஒரு புகைப்படம் வெளியாகி ஆன்லைனை கலக்கி வருகிறது.

தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே ஷூட்டிங் ப்ரேக்கின் போது இயக்குநர் மாரி செல்வராஜ் கிரிக்கெட் விளையாடும், போட்டோ வெளியாகியுள்ளது. பேட்டை ஓங்கியபடி இறங்கி அடிக்க வரும் மாரி செல்வராஜின் போட்டோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது. படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#karnan ரிலாக்ஸ் time🖤 pic.twitter.com/XlqSd55dkc
— Mari Selvaraj (@mari_selvaraj) February 19, 2020