'கர்ணன்' தனுஷ், புது மாப்பிள்ளை யோகி பாபுவுக்கு அளித்த ஸ்பெஷல் கிஃப்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

Dhanush Gifts Gold Chain In Mari Selvaraj's Karnan Shootiong Spot

இதனையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள சுருளி என்று கூறப்படும் 'D40' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில்  தனுஷ் மாரி செல்வராஜ் இயக்ககும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் தொடங்கியது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  நடிகர் யோகி பாபுவுக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் தற்போது அவர் கர்ணன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அப்போது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு திருமண நிகழ்வை கேக் வெட்டிக்கொண்டாடினர். பின்னர் தனுஷ், யோகி பாபுவிற்கு தங்க செயின் பரிசளித்தார்.

Entertainment sub editor