"விக்டர் மாதிரி இதுல...க்ளைமாக்ஸ் தான்" - அருண்விஜய் மாஃபியாவுக்கு ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண்விஜய் நடித்த மாஃபியா படத்தை பார்த்தவர்கள் படத்தை குறித்து உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மாஃபியா படத்துக்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் | audience response for arun vijay karthik naren mafia

அருண்விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் மாஃபியா. துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரசன்னா வில்லனாகவும் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். போதை மருந்து கும்பலை அழிக்க நினைக்கும் போலீஸுக்கு வில்லனுக்கும் நடக்கும் சண்டையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மாஃபியா படத்தை பார்த்த ரசிகர்கள் பிஹைன்ட்வுட்ஸ் தளத்திற்காக உற்சாகமான கருத்துக்களை தெரிவித்தனர். படம் பார்த்த அவர்கள், அருண் விஜய் செம மாஸாக இருக்கிறார், அவரை பார்த்தால் 25 வயது இளைஞர் போல இருக்கிறார் என கூறுகின்றனர். மேலும் திரைப்படத்தை காண வந்த இயக்குநர் கார்த்திக் நரேனை தோளில் தூக்கி வைத்து அவர்கள் கொண்டாடியதுடன், படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமையாக இருந்ததாக கூறினார்கள். மேலும் பிரசன்னா, ப்ரியா பவானி ஷங்கர் சட்டிலாக நடித்ததாகவும், க்ளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கி சுடும் காட்சி பிரமாதமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, என்னை அறிந்தாலுக்கு விக்டர்ன்னா, மாஃபியாவுக்கு ஒரு டெக்ஸ்டர் என ரசிகர்கள் உற்சாகமாக கூறுகின்றனர். மேலும் வடச்சென்னை போல மாஃபியாவின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

"விக்டர் மாதிரி இதுல...க்ளைமாக்ஸ் தான்" - அருண்விஜய் மாஃபியாவுக்கு ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் என்ன? வீடியோ

Entertainment sub editor