www.garudabazaar.com

மீண்டும் துபாய் வானத்தில் துணிவு படத்தின் ப்ரோமோஷன்.. வெளியான அஜித்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Thunivu Dubai Sky Dive Promotion New Poster Released

Also Read | VIDEO: தொழில் அதிபராகும் TTF வாசன்.. முதல் TTF Pit Shop-க்கு பூஜையும் போட்டாச்சு!

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் துபாய் வானத்தில் ஸ்கை டைவிங் முறையில் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் புதிய போஸ்டரை ஏந்தியபடி மீண்டும் துபாய் வானத்தில் ஸ்கை டைவிங் செய்து   ப்ரோமோஷன் செய்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. லைக்கா நிறுவனம் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

Also Read | FAMILY MAN இயக்குனர்களின் அடுத்த Web Series.. ரிலீஸ் தேதியுடன் வெளியான விஜய் சேதுபதியின் மிரட்டல் 1st லுக்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Dubai Sky Dive Promotion New Poster Released

People looking for online information on Thunivu, Thunivu Dubai Sky Dive Promotion will find this news story useful.