'கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு தர்ஷன் நடிக்கும் படம் 'தும்பா'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் காமெடி அட்வெஞ்சர் என்ற ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்குகிறார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் விஜய் டிவி புகழ் தினாவும் நடித்து இருக்கிறார்
இந்த படத்துக்கு விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவருகிறது. இந்த படத்துக்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படித்தான் சி ஸ்னீக் பீக் வெளியாகிவுள்ளது குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் படம் தும்பா.
‘ஏய் உன் மூஞ்சி தான் அப்படி இருக்கு...!’ - தும்பா ஸ்னீக் பீக் வீடியோ வீடியோ