“கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு தர்ஷன் நடிக்கும் படம் 'தும்பா'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் காமெடி அட்வெஞ்சர் என்ற ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்குகிறார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் விஜய் டிவி புகழ் தினாவும் நடிக்கவிருக்கிறாராம்.
இந்த படத்துக்கு விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவருகிறது. இந்த படத்துக்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் VFX மேக்கிங் வீடியோ Behindwoods தளத்தில் வெளியாகியுள்ளது.
ரீகல் ரீல்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரில் உருவாகியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ள ‘தும்பா’ திரைப்படம் இன்று தேதி ரிலீசாகிறது.
குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் 'தும்பா' மேக்கிங் வீடியோ இதோ ! வீடியோ