Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

இசைப்புயலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. த்ரிஷாவின் எமோஷனல் ஸ்டேட்டஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழாவில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாக பகிர்ந்திருக்கிறார் நடிகை த்ரிஷா.

Thrisha Aishwarya Rai and AR Rahman pic at PS 1 Function

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள, கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழுவினர் இயங்கி வருகின்றனர். சமீபத்தில், இயக்குனர் மணிரத்னம், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஹதராபாத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் விழாவில் கலந்துகொண்ட த்ரிஷா, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார். அதில் ரஹ்மானின் வலப்பக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், இடப்பக்கத்தில் த்ரிஷாவும் உள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து "இப்புகைப்படத்திற்கு என்ன கேப்ஷன் கொடுத்தாலும் அது ஈடாகாது" (No Captions will do Justice) எனக்குறிப்பிட்டுள்ளார் த்ரிஷா.  இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Thrisha Aishwarya Rai and AR Rahman pic at PS 1 Function

People looking for online information on ARRahman, AshwaryaRai, PonniyinSelvan, Trisha will find this news story useful.