Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

டிஜிட்டல் மீடியா பயணத்தில் Behindwoods-ன் புதிய மைல்கல்.. நன்றி மக்களே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஜிட்டல் ஊடக துறையில் புதிய மைல்கல்லை பதித்திருக்கிறது  Behindwoods குழுமம். இதற்கு காரணமான பொதுமக்களுக்கு Behindwoods தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

Behindwoods TV Reached 10 million subscribers in Youtube

இணையத்தின் வீச்சு வெகுமக்களை சமூக வலைதளங்கள் நோக்கி ஈர்க்கத் தொடங்கிய காலக் கட்டத்திலேயே Behindwoods டிஜிட்டல் மீடியா துறையில் கால் பதித்தது.

சினிமா துறையின் நொடிக்கு நொடியிலான அப்டேட்ஸ், உள்ளூர் முதல் உலக செய்திகள், நிகழ்வுகள், எளிய மக்களின் அசாதரண வாழ்க்கைகள் என எந்த ஒரு விஷயத்தையும் சமரசமின்றி Behindwoods வழங்கி வருகிறது. அதேபோல ஒவ்வொரு வருடமும் திரை கலைஞர்கள் தொடங்கி, சாதனை படைக்கும் மனிதர்கள் வரை அனைவரையும் கவுரவிக்கும் வகையில் Behindwoods கோல்டு மெடல், டிஜிட்டல் டிவி & சோசியல் பிரபலங்களுக்கான விருது, கோல்டு மைக் விருதுகள் மற்றும் கோல்டு ஐகான் விருதுகள் பிரம்மாண்டமான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

Behindwoods TV Reached 10 million subscribers in Youtube

இத்தனை ஆண்டுகால பயணத்தில், Behindwoods மேலும் பல புதிய பரிணாமங்களை எடுத்துள்ளது. அந்தவகையில், Behindwoods- ன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக துவங்கப்பட்டதுதான் Behindwoods TV.

தமிழக சினிமாவின் நடப்புகளை நொடிக்கு நொடி மக்களுக்கு வழங்கிவரும் சவாலான காரியத்தில் அசாத்தியமான உழைப்பை வழங்கிவருகிறது Behindwoods TV. அதன் பலனாக தற்போது யூடியூபில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் என்னும் மைல்கல்லை எட்டியிருக்கிறது Behindwoods TV. இதற்கு காரணமாக அமைந்த பார்வையாளர்கள், சப்ஸ்கிரைபர்கள், புரொடியூசர்கள், நடிகர்கள், தெழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், பங்குதாரர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் எங்களுடைய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் Behindwoods தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods TV Reached 10 million subscribers in Youtube

People looking for online information on Behindwoods, Behindwoods Tv, Youtube will find this news story useful.