IRAVIN NIZHAL
www.garudabazaar.com

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்.. ஒரு பார்வை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒவ்வொரு வாரமும் போலவே இந்த வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

This week Theatre Release Tamil Movies List

Also Read | சந்திரமுகி - 2 ஷூட்டிங்.. ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்.. நெகிழ்ச்சி பதிவு!

கார்கி

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சாய்பல்லவி நடிப்பில் தமிழில் வெளியாகும் படம் ’கார்கி’. இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். கார்கி  படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றி உள்ளது. இந்த படத்தினை சூர்யா ஜோதிகா இணையர் தங்களது 2டி நிறுவனம் மூலம் வழங்குகின்றனர். இந்த படம் இன்று ஜூலை மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

This week Theatre Release Tamil Movies List

இரவின் நிழல்

ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'. நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்தும் உள்ளார். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இன்று ஜூலை 15 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கலைப்புலி தாணு கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

This week Theatre Release Tamil Movies List

இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளன.‘இரவின் நிழல்’ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படமாக உருவாகியுள்ளது.

"மை டியர் பூதம்"

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.

This week Theatre Release Tamil Movies List

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்று ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | இந்த வாரம் பிரபல ஒடிடிக்களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

This week Theatre Release Tamil Movies List

People looking for online information on GARGI, Iravin nizhal, My dear bootham, Tamil Movies List will find this news story useful.