Pattamboochi

பார்த்திபன் - A.R.ரஹ்மான் இணையும் "இரவின் நிழல்".. ரிலீஸ் எப்போ? செம போஸ்டருடன் சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Iravin Nizhal Movie New Release Date is 15.07.2022

இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில்  வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய  திரைப்படங்கள் பரவலாகக் கவனத்தைப் பெற்றன. ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'.

நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்தும் உள்ளார். முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'விக்டோரியா' என்னும் ஜெர்மானிய திரைப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு, ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானும், பார்த்திபனும் கடந்த 2001 ஆம் ஆண்டு யெலோலோ என்ற  படத்தில் இணைவதாக இருந்தது.  ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ‘இரவின் நிழல்’ படம் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், பார்த்திபனும் இணைந்தனர்.

இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளன.‘இரவின் நிழல்’ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படமாக உருவாகியுள்ளது.

Iravin Nizhal Movie New Release Date is 15.07.2022

இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் ஜூலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி ஜூலை 15 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக  போஸ்டருடன் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கலைப்புலி தாணு கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Iravin Nizhal Movie New Release Date is 15.07.2022

People looking for online information on A R Rahman, Iravin nizhal, Parthiban will find this news story useful.