www.garudabazaar.com

NKP, ஜெய்பீம் வரிசையில் கார்கி.. சாய் பல்லவி நடிப்பில் வெளியான எமோஷனல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Sai Pallavi starring Gargi Movie Trailer Out Now

Also Read | டாப்ஸி நடிக்கும் மிதாலி ராஜின் BIO-PIC.. அடுத்தடுத்து போட்டோ ஷூட்டால் ட்ரெண்டாகும் செம போட்டோஸ்!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

Sai Pallavi starring Gargi Movie Trailer Out Now

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

சமீபத்தில் ராணாவுடன் நடித்த விராத பர்வம் ஜூன் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 1 முதல் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.

Sai Pallavi starring Gargi Movie Trailer Out Now

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சாய்பல்லவி நடிப்பில் தமிழில் உருவாகும் ’கார்கி’ படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். கார்கி  படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றி உள்ளது. இந்த படத்தினை சூர்யா ஜோதிகா இணையர் தங்களது 2டி நிறுவனம் மூலம் வழங்குகின்றனர்.

Sai Pallavi starring Gargi Movie Trailer Out Now

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் சூர்யா, ஆர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டனர். "தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரியும் சாய் பல்லவி, திடிரென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தனது தந்தையை நீதிமன்றத்தின் மூலம் மீட்பது" என டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த படம் ஜூலை மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | அனிருத் வெளியிட்ட 'விக்ரம்' படத்தின் OST.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிரட்டலான பின்னணி இசை!

NKP, ஜெய்பீம் வரிசையில் கார்கி.. சாய் பல்லவி நடிப்பில் வெளியான எமோஷனல் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi starring Gargi Movie Trailer Out Now

People looking for online information on Gargi Movie, Gargi Movie Trailer, Sai Pallavi will find this news story useful.