Nenjuku Needhi

கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் டிஜிட்டல் உரிமம்.. கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் ஒடிடி டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

sardar movie ott digital rights bagged by Aha Tamil

Also Read | கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படம் எப்போ ரிலீஸ்? வெளியான சரவெடி அப்டேட்

நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும். இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் OTT உரிமையை ஆஹா தமிழ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு ஆஹா ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இதனை இரண்டாவது லுக் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

sardar movie ott digital rights bagged by Aha Tamil

2020-ல் தெலுங்கில் துவங்கிய ஆஹா ஓடிடி, ஒரு மில்லியன் சந்தாதாரர்களை ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே பெற்றுது. ஆஹா தமிழுக்கான ஆண்டு சந்தா பார்வையாளர்களுக்கு  ரூ.365க்கு கிடைக்கிறது, அதாவது ஒரு நாளைக்கு 1 ரூபாயாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

sardar movie ott digital rights bagged by Aha Tamil

இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகின்றன. இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இதன் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படம், செப்டம்பர் 30 அன்றும், விருமன் படம் ஆகஸ்ட் 31 அன்றும் ரிலீஸ் ஆகின்றன.

sardar movie ott digital rights bagged by Aha Tamil

Also Read | கார்த்தி நடிக்கும் மாஸான புதிய படம்.. சேட்டிலைட் TV உரிமையை கைப்பற்றிய முன்னணி சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

sardar movie ott digital rights bagged by Aha Tamil

People looking for online information on Aha Tamil, Karthi, Sardar movie, Sardar movie ott digital rights, Sardar Movie updates will find this news story useful.