www.garudabazaar.com

பெரிய வண்டை திண்ற ரன்வீர் சிங்.. இதான் காரணமா? நெட்பிளிக்ஸ் வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங், பெரிய வண்டை திண்ணும் வீடியோ வெளியாகி உள்ளது.

Ranveer Vs Wild With Bear Grylls only on Netflix Dropping July 8

Also Read | AK61 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் வெளியான தகவல்!

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இதில் அடர்ந்த காடுகளில் சிக்கிக்கொண்டால் உயிர்பிழைத்து அங்கிருந்து எவ்வாறு தப்பித்து வர வேண்டும் என பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில உலகப் பிரபலங்களும் அவரோடு சேர்ந்து பயணிப்பார்கள்.

இதுவரை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்கி கவுசால், அக்ஷய் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த எபிசோட்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

முன்னதாக பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் புதிய நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக பியர் கிரில்ஸ் சென்றபோது, அந்த தீவில் கொடிய விஷதன்மையுடைய தேனீ ஒன்று அவரின் முகத்தில் தாக்கியதாக தகவல் வெளியானது.

Ranveer Vs Wild With Bear Grylls only on Netflix Dropping July 8

தேனீயால் தாக்கப்பட்டு முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கியுள்ள பியர் கிரில்ஸின் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து சிகிச்சைக்குப் பின்னர் அவர் இயல்புநிலைக்கு திரும்பினார்.

இதையடுத்து பியர் கிரில்சின் அடுத்த சாகச எபிசோடில் பிரபல பாலிவுட் நடிகரான ரண்வீர் சிங் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி Exclusive ஆக நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவை நெட்பிளிக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ரன்வீர் சிங் வண்டை உண்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜூலை 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் இந்த நிகழ்ச்சி வெளியாக உள்ளது.

Also Read | வைரலாகும் AK 61 படத்தின் BTS போட்டோ.. யார் யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Ranveer Vs Wild With Bear Grylls only on Netflix Dropping July 8

People looking for online information on Bear Grylls, Netflix, Ranveer, Ranveer Singh will find this news story useful.