Video: அங்கேயே 'முடிஞ்சிருச்சு' அப்புறம் ஏன் இப்படி?... 'ஆதாரம்' பகிரும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சோம்பேறி என ஆரி சொன்னதற்கு பாலாஜி அவரை கண்டபடி திட்டி மைக்கையும் உடைத்து விட்டார். இதைப்பார்த்து உள்ளுக்குள் பிக்பாஸே மிரண்டு போயிருப்பார். மறுபக்கம் அடுத்த வார கேப்டன் பதவிக்கான போட்டி நடந்தது. இதில் சிறந்த பெர்பாமர்களாக தேர்வு செய்யப்பட்ட ரியோ, சோம், ஆஜீத் மூவரும் விளையாடினர். கடைசியில் ரியோ கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

Aari Asked apologize to Balaji; Netizens shared Video

கேப்டன் ரியோவுக்கு வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் முதல் வேலையாக ஜெயிலில் இருந்த ஆரி, பாலாஜி இருவரையும் விடுதலை செய்ய சொன்னார். வெளியில்  வந்த ஆரி, ரியோவிடம் பேச இடையில் பாலாஜி புகுந்து மறுபடியும் ஆரியை வம்பிழுத்தார். ஆனால் ஆரி அதை கண்டுகொள்ளவில்லை. என்றாலும் என்ன சோம்பேறின்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்கணும் என பாலாஜி பிடிவாதம் பிடித்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அதான் அவரு ஜெயிலுக்கு உள்ளேயே நான் சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்லி ஸாரி கேட்டாரே. அப்புறம் ஏன் இந்த பாலாஜி இப்படி மறுபடியும் வம்பு இழுக்குறாரு? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஆரி ஸாரி கேட்ட வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Aari Asked apologize to Balaji; Netizens shared Video

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.