என்ன வேணா 'நடக்கட்டும்' நான் இப்படித்தான்... பாராட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீண்டும் ஆரி, பாலாஜிக்கு இடையில் சண்டை ஏற்பட அவர்கள் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 88 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 2 வாரங்களில் பைனல் வந்து விடும் என்பதால் டைட்டிலை வின் செய்யப்போவது யார்? என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Netizens praised Aari Arjunan's Cool Attitude in jail

இந்த நிலையில் வாரம் முழுவதும் சுவாரஸ்யம் குறைந்த இரண்டு நபர்களை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் நேற்று திரி கொளுத்தி போட்டார். இதில் ஆரி, பாலாஜி இருவரையும் சக போட்டியாளர்கள் தேர்வு செய்ய இருவரும் ஜெயிலுக்கு போனார்கள். ஆனால் அங்கு சென்றும் பாலாஜி தன்னுடைய கோபத்தை விடவில்லை. சோம்பேறி என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு தன்னுடைய இஷ்டத்துக்கு ஆரியை திட்டித்தீர்த்தார்.

நிதானமிழந்து அவர் தன்னுடைய மைக்கை உடைத்தபோது கூட ஆரி அமைதியாக இருந்து அவருக்கு பதிலளித்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரு அப்படி கத்திட்டு இருக்காரு நீங்க என்ன பாஸ் போகோ சேனல் பாக்குற மாதிரி இவ்ளோ கூலா இருக்கீங்க? என ஆரியை பாராட்டி வருகின்றனர். தற்போது ஆரி, பாலாஜி இருவரும் ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens praised Aari Arjunan's Cool Attitude in jail

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.