www.garudabazaar.com
www.garudabazaar.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறியது இவரா... சோகத்தில் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

this contestant got eliminated from cwc குக் வித் கோமாளி வெளியேறியது

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை நடந்திராத புதிய மாற்றமொன்று சமீபத்தில் செய்யப்பட்டுள்ளது. அதாவது வைர்ல்டு  கார்டு போட்டியாளராக நடிகை ஒருவர் களமிறங்கினார் . இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இப்படி வைர்ல்டு  கார்டு போட்டியாளர்கள் நுழைவது வழக்கம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் நடிக்கும் ரித்திகா என்ற நடிகை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்தார். இவர் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே அறிமுக நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஸ்பெஷல் பெர்பாமன்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில வாரங்களே ஆன நிலையில் ரித்திகா இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

this contestant got eliminated from cwc குக் வித் கோமாளி வெளியேறியது

People looking for online information on Cooku with comali will find this news story useful.