கவினுடன் ஜோடி சேர்ந்த குக் வித் கோமாளி பிரபலம்... இன்டர்நெட்டில் வைரலாகும் புகைப்படம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக பங்கெடுத்திருப்பவர் பவித்ரா. இவரும் புகழும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கின்றன. எனவே இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கிவிட்டனர். இவர் மலையாள சினிமாவின் மூலமாக தான் திரைத்துறைக்கு வந்தவர். அதன்பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குகொண்டார்.

kavin acted with cooku with comali contestant கவினுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற தொடரில் அஸ்வினுடன் சேர்ந்து நடித்தார். இந்நிலையில் நடிகை பவித்ரா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் பிக்பாஸ் நடிகர் கவினுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற  ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் இது எந்த படம்? இது கவின் தானே? என்பது போன்ற கேள்விகளை  எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.  இன்னும் வெளியாகாத வெப்சீரிஸில் பவித்ராவும் கவினும் ஒன்றாக நடித்துள்ளனர். இந்த ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை தான் பவித்ரா தற்போது பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kavin acted with cooku with comali contestant கவினுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

மேலும் செய்திகள்

kavin acted with cooku with comali contestant கவினுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

People looking for online information on Kaviin, Pavithra will find this news story useful.