"என் மேல ஏன் கோப படுறீங்க..." - குக் வித் கோமாளி ரித்திகா சில நெட்டிசன்களுக்கு கேள்வி.. வைரல் Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை நடந்திராத புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது வைர்ல்டு  கார்டு போட்டியாளராக நடிகை ஒருவர் களமிறங்கியுள்ளார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இப்படி வைர்ல்டு  கார்டு போட்டியாளர்கள் நுழைவது வழக்கம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் நடிக்கும் ரித்திகா என்ற நடிகை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்துள்ளார். இவர் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே அறிமுக நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஸ்பெஷல் பெர்பாமன்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இந்த புரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வேற லெவல் வைரலாகி வருகிறது.

cooku with comali rithika live குக் வித் கோமாளி ரித்திகா லைவ்

இந்நிலையில் நடிகை ரித்திகா தற்போது ரசிகர்களுடன் லைவ்வில் பேசியிருக்கிறார். அப்பொழுது அவர் கூறும் பொழுது "குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது கடவுளின் ஆசீர்வாதம் தான். பலரும் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். சிலருக்கு இதுபிடிக்காமலும் இருக்கலாம். ஏனென்றால் மற்ற போட்டியாளர்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி திடீரென்று உள்ளே நுழையலாம் என்று கேட்கின்றனர். அதற்கு பெயர் தான் வைர்ல்டு கார்டு. நான் இல்லை என்றாலும் வேறு யாராவது ஒருவர்  வந்து தான் இருப்பார்கள். அதனால் நீங்கள் என் மீது தனிப்பட்ட முறையில் கோபப்படுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ஆனாலும் அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்பதால் அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனாலும் குக் வித் கோமாளி ரசிகர்கள் எனக்கு வரவேற்பு தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

"என் மேல ஏன் கோப படுறீங்க..." - குக் வித் கோமாளி ரித்திகா சில நெட்டிசன்களுக்கு கேள்வி.. வைரல் VIDEO! வீடியோ

cooku with comali rithika live குக் வித் கோமாளி ரித்திகா லைவ்

People looking for online information on Cooku with comali will find this news story useful.