இதுவரை ஷிவாங்கி போடாத வேடம்... அதுவும் காதலர் தின வாரத்தில் என்ன கெட்டப் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

cooku with comali latest update இதுவரை ஷிவாங்கி போடாத வேடம்

இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதாலும் புதிய வைர்ல்டு கார்டு போட்டியாளர் வந்திருந்தாலும் நகைச்சுவை களேபரமாக நிகழ்ச்சி சென்றது. இந்நிலையில் இந்த வாரத்துக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடைபெறாத அளவில் கோமாளிகள் குழந்தைகளின் பேவரைட் ஹீரோக்கள் வேடங்களை அணிந்துள்ளனர்.

அதிலும் முக்கியமாக இந்த வாரம் காதலர் தினம் கொண்டாடப்படுவதால், இன்னும் நகைச்சுவையாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் அஷ்வினுக்கு இந்த வாரம் சுனிதா கோமாளியாக தேர்வாகிறார். இதனைப் பார்த்து ஷிவாங்கி டென்ஷன் ஆவதையும் பார்க்க முடிகிறது. மேலும் ஷிவாங்கி இந்த வாரம் டோரா வேடத்திலும் புகழ் ஷின்ஷேன் வேடத்திலும் களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

cooku with comali latest update இதுவரை ஷிவாங்கி போடாத வேடம்

cooku with comali latest update இதுவரை ஷிவாங்கி போடாத வேடம்

People looking for online information on Cooku with comali will find this news story useful.