www.garudabazaar.com

"புரட்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துகள்".. இயக்குனர் பா. ரஞ்சித்தை வாழ்த்திய தெருக்குரல் அறிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். 

Therukural Arivu wishes Director Pa Ranjith Birthday

Also Read | BREAKING: கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா - 2.. படத்தின் தாறுமாறான அப்டேட்!

தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது.

இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். “மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.

Therukural Arivu wishes Director Pa Ranjith Birthday

இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை  இயக்கினார். இந்த படத்தில்  காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Therukural Arivu wishes Director Pa Ranjith Birthday

தற்போது நடிகர் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று இயக்குனர் பா‌. ரஞ்சித் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலகினர், கலை இலக்கிய அமைப்புகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் ஒரு பகுதியாக பாடலாசிரியர் & பாடகர் தெருக்குரல் அறிவு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Therukural Arivu wishes Director Pa Ranjith Birthday

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " அண்ணல் அம்பேத்கர் இருந்ததால் நாங்கள் இங்கே இருக்கிறோம். நான் இங்கு இருக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் (பா. ரஞ்சித்). புரட்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துகள் பா.ரஞ்சித் அண்ணா. ஜெய் பீம்!" என அறிவு பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arivu (@therukural)

Also Read | ஜிகர்தண்டா - 2 படத்தில் இணையும் பிரபல முன்னணி மலையாள நடிகை? செம்ம COMBO!

தொடர்புடைய இணைப்புகள்

Therukural Arivu wishes Director Pa Ranjith Birthday

People looking for online information on Arivu, Pa Ranjith, Pa Ranjith Birthday, Therukural arivu will find this news story useful.