அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங்.. 'பட்டாசு' கொளுத்தும் தனுஷ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 30, 2019 10:18 AM
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரு வெற்றி பெற்றது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் பிரிட்டிஷ் ஆக்டர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்கலில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் தனுஷ், தன்னுடைய படப்பிடிப்பு பணிகளை வருகிற நவம்பர் 5 ஆம் தேதியுடன் நிறைவு செய்கிறாராம். அதனைத் தொடர்ந்து வருகிற 6 ஆம் தேதி சென்னை திரும்பும் அவர், அடுத்த நாளே 'பட்டாசு' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம்.
'பட்டாசு' படத்தை 'எதிர் நீச்சல்', 'கொடி' படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்கள்.