விஷால் - சுந்தர். சியின் "ஆக்சன்" டிரைலர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Oct 27, 2019 06:34 PM
"வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.
மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்ஷன்” திரைப்படம்.
கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தமன்னா. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ள. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் ஆக்ஷன் படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் - சுந்தர். சியின் "ஆக்சன்" டிரைலர் இதோ வீடியோ