விஷாலின் 'இரும்புத்திரை 2' படத்தின் தலைப்பு மாற்றமா ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 21, 2019 10:58 AM
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'இரும்புத்திரை'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன் இந்த படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார்.

இதன் இரண்டாம் பாகமாக 'இரும்புத்திரை 2' படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்குகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸன்ட்ரா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்துக்கு தற்போது 'சக்ரா' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோயம்புத்தூரில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.