www.garudabazaar.com

OFFICIAL: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "தி கிரேட் இந்தியன் கிச்சன்".. ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "The Great Indian Kitchen" படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

The Great Indian Kitchen Tamil Movie Release Date Announced

Also Read | விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் - 2.. OTT & சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

மலையாளத்தில் கடந்தாண்டு Neestream ஓடிடியில் வெளியான  "The Great Indian Kitchen" விமர்சகர்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இப்படத்தை ஜியோ பேபி எழுதி இயக்கினார்.

நிமிஷா சஜயன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டிஜோ அகஸ்டின், ஜோமோன் ஜேக்கப், விஷ்ணு ராஜன், சஜின் S ராஜ் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்திற்கு சுராஜ் S.குரூப் மற்றும் மேத்யூ புலிக்கண் இசையமைத்தனர்.

The Great Indian Kitchen Tamil Movie Release Date Announced

கேரளாவில் ஆசிரியராக வேலை செய்யும் சூரஜ், நடன ஆசிரியராக இருக்கும் நிமிஷாவை திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு பின்னர் நிமிஷாவுக்கு காலையில் எழுந்ததும் குடும்பத்துக்கு உணவு தயாரிப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, மதிய உணவு தயாரிப்பது, மதிய உணவுக்கு பின் பாத்திரங்களை சுத்தம் செய்வது, பிறகு சமையல் அறையில் இரவு உணவுக்குப்பின் சுத்தம் செய்வது பின்னிரவில் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை. தினமும் இதே சம்பவங்கள், அதனால் ஏற்படும் பெரும் சலிப்பு. இந்த வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படும்போது அந்த பெண் என்ன முடிவை எடுக்கிறார் என்பதும் தான் படத்தின் கதை.

The Great Indian Kitchen Tamil Movie Release Date Announced

தமிழில் இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் R. கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.இந்த படத்துக்கு ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

R .கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைக்கிறார்.

The Great Indian Kitchen Tamil Movie Release Date Announced

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை சக்தி பிலீம் ஃபேக்டரி வினியோகம் செய்கின்றது. இந்த படத்தின் ஓடிடி & சேட்டிலைட் உரிமத்தை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | நயன்தாரா நடித்த 'CONNECT'.. பிரீமியர் ஷோ வில் படம் பார்த்த G.P முத்து!

தொடர்புடைய இணைப்புகள்

The Great Indian Kitchen Tamil Movie Release Date Announced

People looking for online information on Aishwarya Rajesh, The Great Indian Kitchen, The Great Indian Kitchen Tamil Movie will find this news story useful.