www.garudabazaar.com

நயன்தாரா நடித்த 'CONNECT'.. பிரீமியர் ஷோ வில் படம் பார்த்த G.P முத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன்.

G P Muthu Watching Connect Movie Premier Show

Also Read | நெற்றி நிறைய விபூதி பூசி அஜய் தேவ்கன்.. ”கைதி” இந்தி ரீமேக்.. தெறிக்கும் போஸ்டர்!

'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’.   அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார்.

G P Muthu Watching Connect Movie Premier Show

இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

G P Muthu Watching Connect Movie Premier Show

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியானது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22.12.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைவேளை இல்லாத தமிழ்த் திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

G P Muthu Watching Connect Movie Premier Show

இந்த படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. ஹாரர் வகைமையில் இந்த டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள கிருஷ்ண வேணி திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கலந்து கொண்டனர். ஏராளமான திரையுலகினர் இந்த படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டு படம் பார்த்தனர். பிக்பாஸ் பிரபலமான நடிகர் ஜி.பி. முத்து இந்த சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு கனெக்ட் படத்தை கண்டு களித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

 

Also Read | விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் - 2.. OTT & சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தொடர்புடைய இணைப்புகள்

G P Muthu Watching Connect Movie Premier Show

People looking for online information on Connect, Connect Movie Premier Show, GP MUTHU, Nayanthara, Vignesh shivan will find this news story useful.