தளபதி கோப்பை T20 போட்டியை துவக்கி வைத்து கிரிக்கெட் ஆடிய அமைசர் உதயநிதி ஸ்டாலின்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Mar 02, 2023 05:57 PM

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமானவர் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanith Stalin Launched Thalapathy Cup T20 Women Cricket

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | Yogi Babu : யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஐகோர்ட் மகாராஜா..!! இயக்குநர் யார் பாருங்க..

சினிமா பயணம்

உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலும் நடித்தும் திரைப்படங்கள் தயாரித்தும் வந்தார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம். ராஜேஷ் இயக்கத்திலான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் நடிகராக, ஹீரோவாக அறிமுகம் ஆனார்.  நடிகை ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் படம் முழுவதும் பயணம் செய்யும் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒன்று இரண்டு திரைப்படங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு நண்பராக சந்தானம் நடித்திருந்தார்.

அழுத்தமான கதைக்களங்கள்

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் தம்முடைய திரைப் பாணியை மாற்றினார். நகைச்சுவையை குறைத்து அழுத்தமான கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க தொடங்கினார். அதன்படி அண்மை காலங்களில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. இவற்றை தொடர்ந்து கண்ணை நம்பாதே திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மு.மாறன் இயக்கியுள்ளார்.

Udhayanith Stalin Launched Thalapathy Cup T20 Women Cricket

Images are subject to © copyright to their respective owners.

நடிப்பதை நிறுத்திய உதயநிதி

இதற்கு அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கத்திலான மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதேபோல் திரைப்படங்கள் பலவற்றை தயாரித்தும் தாம் நிர்வகிக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டும் வந்தார் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் (மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும்) மாமன்னன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடையே திட்டவட்டமாக தெரிவித்தார்.

Udhayanith Stalin Launched Thalapathy Cup T20 Women Cricket

Images are subject to © copyright to their respective owners.

அரசியல் ஈடுபாடு

ஒருபுறம் நடிகராக பயணித்த உதயநிதி ஸ்டாலின், மறுபுறம் அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார். திமுக இளைஞரணி பொறுப்பில் இருந்த உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களை சந்திப்பது கட்சி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுப்பது கருத்தரங்கங்களில் பங்கேற்பது என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர்

பிறகு, உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக  கடந்த 2022, டிசம்பர் 14-ஆம் தேதி  திமுக கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ரவி, உதயநிதிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Udhayanith Stalin Launched Thalapathy Cup T20 Women Cricket

Images are subject to © copyright to their respective owners.

தளபதி கோப்பை 2023

இந்நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தளபதி கோப்பை 2023 - பெண்கள் T20 கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் உடன் இருந்தனர்.  திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் இந்த விளையாட்டு நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "தலைவர் மறைந்த போது அந்த வேதனையை விட"... வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. எமோஷனல் ஆன முதல்வர் MK Stalin!!

Tags : #UDHAYANITH STALIN #DMK CRICKET

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Udhayanith Stalin Launched Thalapathy Cup T20 Women Cricket | Tamil Nadu News.