Final Goal-க்கு தயாரான தளபதி விஜய்யின் ‘பிகில்’ டீம் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 26, 2019 11:39 AM
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்.19ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலின்படி, வரும் செப்.28, 29 ஆகிய தேதிகளில் படத்தின் முக்கிய காட்சிகள் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
அதற்கு முன்பாக நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் நடிக்கும் காட்சிகள் நாளை(செப்.27) மலேசியா விமான நிலையத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக இயக்குநர் அட்லி மற்றும் படக்குழு இன்றே மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி பண்டிகைக்கு வெறித்தனம் கூட்டும் விதமாம வெளியாகவிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.