தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் மோதும் பாலிவுட் ஸ்டார்?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 25, 2019 05:54 PM
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்துக்கு போட்டியாக பாலிவுட்டின் முன்னணி நடிகரின் திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்.19ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கு போட்டியாக பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடித்துள்ள திரைப்படம் ஒன்ரு ரிலீசாகவுள்ளது.
இதனிடையே, பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் க்ரித்தி சனோன், பூஜா ஹெக்டே, ரித்தேஷ் தேஷ்முக், பாபி டியால், ராணா, க்ரித்தி கர்பாந்தா, அமந்தா ரொஸாரியோ, சங்கி பாண்டே, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சுமார் 600 வருடங்களுக்கு முன்பிருந்த காலக்கட்டத்தையும் தற்போதைய தலைமுறையையும் ஒப்பிடும் வகையில் இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.