தளபதியின் 'மாஸ்டர்' குறித்து பிரபல நடிகர்... ''ஒரு சீன்ல விஜய் ஒருத்தன அறையும் போது...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து தளபதியின் குட்டிக் கதையை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த இசை வெளியீட்டு விழா சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த படத்தில் இருந்து வாத்தி கமிங் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் லிரிக்கல் வீடியோவில் அனிருத், நடிகர் சேத்தன், பாடகர் கானா பாலசந்தர் உள்ளிட்டோர் பாடலில் செம பெர்ஃபாமன்ஸ் அளித்திருந்தனர்.

இந்நிலையைில் நடிகர் சேத்தன் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தொகுப்பாளர் அக்னியின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ''படத்துல அந்த பாட்டுல நான் இருக்க மாட்டேன். இந்த பாட்டுல என்ன எப்படி யோசிச்சு கூப்பிட்டாங்கனு தெரியல. நன்றி. ஷூட்டிங்கே ரொம்ப  ஜாலியா இருந்தது.

விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததும் அங்க ஒரு 50 பேர் இருந்தா அவங்ககிட்ட கை கொடுத்து பேசிட்டு அப்புறம் தான் ஷாட்டுக்கு ரெடியாவாரு.

ஒரு பெரிய சீன் இருக்கும். விஜய் ஒருத்தர அறையணும். அறையும் போது, அவர் அப்படியே பின்னாடி போணும். ஆனா அந்த பையன் விழுந்துட்டாரு.

அந்த டைம்ல விஜய்க்கு உடம்பு சரியில்ல.  அந்த பையன் புதுசு. எந்தவொரு டென்ஷனும் இல்லாம அந்த பையன தட்டிக்கொடுத்து திரும்ப அந்த சீன்ல நடிச்சாரு. அந்த பையனும் அதுக்கு அப்புறம் ஜாலியா பண்ணிட்டான்'' என்றார்.

தளபதியின் 'மாஸ்டர்' குறித்து பிரபல நடிகர்... ''ஒரு சீன்ல விஜய் ஒருத்தன அறையும் போது...'' வீடியோ

Entertainment sub editor