''விஜய் கூட நடிக்கிறதுக்கு ரெடி, ஆனா...'' - மகேஷ் பாபு சொன்ன கண்டிஷன் !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 11, 2020 08:23 PM
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு இன்று (11.01.2020) வெளியாகியுள்ள படம் சரிலேரு நீக்கெவ்வரு. இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் மகேஷ் பாபு Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,''போக்கிரி' படம் ரிலீஸ் ஆகி சென்சேஷன் ஆச்சு ஆந்திராவுல. விஜய் மாதிரி பெரிய ஹீரோ அத பார்த்து ரீமேக் பண்ணும் போது எனக்கு மிகப் பெரிய திருப்தயை அளித்தது.
அது தான் சல்மான்கான் ஹிந்தியில் 'வான்டட்' படம் நடிக்கும் போதும் நடந்தது. விஜய் கூட படம் நடிப்பதற்கு கண்டிப்பாக நான் தயார். ஆனால் எங்கள் இருவரையும் வைத்து படம் இயக்க சரியான இயக்குநர் வேண்டும்'' என்றார்.
''விஜய் கூட நடிக்கிறதுக்கு ரெடி, ஆனா...'' - மகேஷ் பாபு சொன்ன கண்டிஷன் ! வீடியோ