www.garudabazaar.com

பிக்பாஸுக்குள் நுழையும் தளபதி விஜய் பட நடிகை?... ரசிகர் கேட்ட கேள்விக்கு மழுப்பல் பதில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர் அம்ரிதா, இளைஞர்களிடையே பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் கேப்டன் தென்றல் என்ற கதாபத்திரத்தில்  நடித்த போது, அவரது அற்புதமான நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து தமிழில் பிக்பாஸ் கவினுடன் லிப்ட் என்ற படத்தில் தற்போது நடிக்க உள்ளார்.

பிக்பாஸுக்குள் தளபதி விஜய் பட நடிகை | Thalapathy vijay film actress to enter biggboss4

2012-ல் வெளியான பத்மவியூஹம் என்ற மலையாள படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான இவர், முதலில் நடித்த படைவீரன் என்ற படத்தின் மூலமே அறியப்பட்டார். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடிகை அம்ரிதா நுழைய இருப்பதாக செய்திகள் வெளியானது. அது பொய் என்று அவரே மறுத்து வந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் இது குறித்து இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பிய போது, "நான்? ம்ம்... தெரியாது... அது ஒரு சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்...!" என்று கூறியுள்ளார். எனவே அவர் பிக் பாஸில் நுழைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸுக்குள் தளபதி விஜய் பட நடிகை | Thalapathy vijay film actress to enter biggboss4

People looking for online information on Amritha, Biggboss4, Kamal, Kavin will find this news story useful.