'ஜெயம்', 'எம்.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி', 'சந்தோஷ் சுப்ரமணியம்' போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா. இவர் இயக்கி, ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி உள்ளிட்டோர் நடித்த 'தனி ஒருவன்' திரைப்படம் ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது 'தனி ஒருவன் 2' இயக்கும் பணிகளில் இருக்கிறார். இதனையடுத்து இன்று (14-06-2019) தந்தையர் தினம் என்பதால் அவர் தனது அப்பா எடிட்டர் மோகனுடன் Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது விஜய் குறித்து பேசிய அவர், 'விஜய் எனக்கு குடும்பத்தில் ஒருவர் மாதிரி. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். அவருடன் ஒரு படத்தில் பணிபுரிவதாக இருந்தது. அவருக்கு என்னுடைய 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' படங்கள் மிகவும் பிடிக்கும்.
என்னை எப்பொழுது சந்தித்தாலும் படம் செய்வது பற்றி கேட்பார். ஆனால், நான் தனி ஒருவன் 2 இயக்கி விட்டுத்தான் அடுத்த படம் என்ற மன நிலையில் இருந்தேன். நிச்சயம் தனி ஒருவன் 2க்கு பிறகு ஒரு படத்தில் நாங்கள் பணிபரிவோம். என் தம்பியை அடுத்து நான் ஒருத்தர வைத்து படம் இயக்க ஆசப்படுகிறேன் என்றால் அது விஜய் சார் மட்டும் தான் என்றார்.
''தனி ஒருவன் 2'க்கு பிறகு நிச்சயம் விஜய் சாருடன் ஒரு படம்'' வீடியோ