தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' பிரபலம் கமெண்ட் - ''சூப்பர் ஓவர்ல இவங்க தான் பேட் பண்ணனும்''
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து தோன்றிய 'மாஸ்டர்' மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எக்ஸ்பி கிரியேட்டர் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தின் பாடல் ஷூட்டிங் சமீபத்தில் கர்நாடகா மாநிலம் ஷிவமோகோவில் நடைபெற்றது. இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
அதில், சூப்பர் ஓவரில் மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல் பேட் பண்ணனும் சைனி சூப்பர் ஓவரில் பந்து வீசணும் என்றார். மேலும் சூப்பர் ஓவர் டையில் முடிய போகிறது. இரண்டு மேட்ச், 3 சூப்பர் ஓவர்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி சூப்பர் ஓவரில்1 பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
I feel manish Pandey and Kl rahul should bat for super over. Saini should bowl super over #INDvsNZ
— Sathish krishnan (@dancersatz) January 31, 2020