ரஜினியுடன் நடிக்கும் மிஸ் இன்டியா கீர்த்தி சுரேஷ் - அடுத்த படம் ரிலீஸ் எப்போது ..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் இன்டியா திரைப்படம் அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

rajini's co-star keerthy suresh's miss india release date

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய், விக்ரம் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருதை பெற்றார். மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'மிஸ் இன்டியா' படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மிஸ் இன்டியா படத்தின் ஓவர்சீஸ் உரிமையை வாங்கியிருக்கும் ப்ரைட் சினிமாஸ் வெளியிட்டுள்ள பதிவில், மிஸ் இன்டியா திரைப்படம் அமெரிக்காவில் மார்ச் 5 அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் மார்ச் 6 அன்று படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இயக்குநர்  நரேந்திர நாத் இயக்கும் இத்திரைப்படத்தில் ஜகபதி பாபு, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Entertainment sub editor