'இந்தியன் 2'வில் 300 பேரோடு Fast & Furiousஆக மோதும் கமல் - ஷங்கர்ணா சும்மாவா!
முகப்பு > சினிமா செய்திகள்2.0 திரைப்படத்துக்கு பிறகு ஷங்கர் கமலுடன் இணையும் திரைப்படம் இந்தியன் 2. இதில் அவருடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்துக்காக ஏற்கெனவே போபாலில் நடைபெற்ற படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் இயக்கிய சண்டைக்காட்சியில் 2000 பேர் கமலுடன் மோதியது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து தற்போது கமல் தன் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் 300 பேர் கமலுடன் மோதும் சண்டைக்காட்சிக்காக பின்னிமில்லில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சமீபத்தில் ஷூட்டிங் நடைபெற்றது. ஃபாஸ்ட் & ஃபூரியஸ் ஸ்டண்ட் டீமுடன் கமல் இணைந்த இந்த சண்டைக்காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கும் என்று உறுதியாக நம்பலாம்.