www.garudabazaar.com
iTechUS

விஜய் திரை வாழ்வில் மிகப்பெரிய தொகையா..? Thalapathy 67 சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

Thalapathy 67 satellite rights by Sun TV for a big price

Also Read | துணிவைத் தொடர்ந்து அஜித்துடன் 4வது படம்.. என்ன மாதிரியான கதை..?.. H. வினோத் EXCLUSIVE தகவல்..!

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்து வாரிசு படம், 7 நாளில் 210 கோடி ரூபாயையும்,  11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான SVC அதிகாரப்பூர்வமாக  அறிவிததது.

இதனிடையே வாரிசு படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.‌  இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மிஷ்கின், நடிகை த்ரிஷா, கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கனவே நமக்கு கிடைத்த தகவல்களின்படி தளபதி 67 படத்தின் 2வது கட்டப்படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்குவதாகவும், இதில் விஜய் மற்றும் மிஷ்கின் பங்குபெறும் காம்பினேஷன் காட்சிகளுக்கான 10 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.  மற்ற நடிகர்கள் ஜனவரி 27-ஆம் தேதிக்கு பின் இணைவதாகவும், நீண்ட 30 நாட்கள் கொண்ட படப்பிடிப்பாக இந்த கொடைக்கான படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை இதுவரையிலான விஜய்யின் திரைவாழ்க்கையிலேயே மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி கைப்பற்றியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏற்கனவே வாரிசு திரைப்பட உரிமத்தை சன் டிவி பெற்றிருந்த நிலையில், தற்போது தளபதி 67 படத்தின் உரிமமும் சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | எம்.ஜி.ஆர் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட நடிகர் விஷால்.. தீயாய் பரவும் வைரல் போட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 67 satellite rights by Sun TV for a big price

People looking for online information on Sun TV, Thalapathy 67, Thalapathy Vijay, Vijay will find this news story useful.