www.garudabazaar.com
iTechUS

"H. வினோத், விஜய் சார்க்கு இரண்டு கதை வச்சுருக்கார்".. மனோபாலா பகிர்ந்த EXCLUSIVE தகவல்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஹெச். வினோத், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனல் நடத்திய ரசிகர்கள் திருவிழாவில் கலந்து கொண்டார்.

H Vinoth Fans Festival Manobala Exclusive about H Vinoth and Vijay

Also Read | போடு.! தனுஷ் நடிக்கும் 50-வது படம்.. போஸ்டருடன் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்  H.வினோத், சமூகவியல் மற்றும் அரசியல் குற்றம் தொடர்பான படங்களை படமாக்க கூடிய வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்.  H.வினோத், சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

H Vinoth Fans Festival Manobala Exclusive about H Vinoth and Vijay

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.  'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

H Vinoth Fans Festival Manobala Exclusive about H Vinoth and Vijay

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தின் தயாரிப்பாளர் மனோபாலாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். துணிவு படம் குறித்தும், இயக்குனர் வினோத் குறித்தும் பல தகவல்களை தயாரிப்பாளர் மனோபாலா பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் விஜய்க்கு இரண்டு கதைகளை வினோத் எழுதி வைத்திருப்பதாக மனோபாலா தகவல்களை பகிர்ந்துள்ளார். சதுரங்க வேட்டை படம் உருவான விதம் குறித்தும் மனோபாலா இந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Also Read | "துணிவு GRAND BLOCKBUSTER".. UK-ல் மட்டும் இத்தனை கோடி வசூலா? அதிகாரப்பூர்வ தகவல்!

"H. வினோத், விஜய் சார்க்கு இரண்டு கதை வச்சுருக்கார்".. மனோபாலா பகிர்ந்த EXCLUSIVE தகவல்! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Fans Festival Manobala Exclusive about H Vinoth and Vijay

People looking for online information on H Vinoth, H Vinoth Fans Festival, Manobala, Manobala Exclusive, Vijay will find this news story useful.