www.garudabazaar.com
iTechUS

லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'ருத்ரன்'.. ஷூட்டிங் & ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Lawrence Rudhran climax fight shooting started Deets

Also Read | "நீ உயரனும் என்பதே என் இலக்கு".. டைட்டில் வென்ற பின் மகனை சந்தித்த அசிம்.. உருக்கமான பதிவு!!

'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

Lawrence Rudhran climax fight shooting started Deets

இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் கிளாசிக் படமான 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு நடந்தது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக மாஸ்டர் ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

Lawrence Rudhran climax fight shooting started Deets

"ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த சண்டைக் காட்சி படப்பிடிப்புடன் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொள்ளாச்சி & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்.!.. கதை சொல்லியாச்சா? EXCLUSIVE UPDATE

தொடர்புடைய இணைப்புகள்

Lawrence Rudhran climax fight shooting started Deets

People looking for online information on Priya Bhavani Shankar, Raghava Lawrence, Rudhran, Rudhran Movie Update will find this news story useful.